‘இலங்கை ஒன்றிணைய வேண்டும்’: ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமர் மோடி கடிதம்

‘இலங்கை ஒன்றிணைய வேண்டும்’: ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமர் மோடி கடிதம்

சர்வதேச யோகா தினத்தை ஊக்குவிக்க இலங்கை ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம், உலகளாவிய கலாச்சார நாட்காட்டியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாக இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்மொழிவாக தொடங்கப்பட்ட சர்வதேச யோகா தினம், கடந்த பத்தாண்டுகளில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் உலகளாவிய இயக்கமாக வளர்ந்துள்ளது.

பண்டைய இந்திய பாரம்பரியமான யோகாவை இன்று உலகின் அனைத்து கலாச்சாரங்களை கொண்ட நாடுகள் மற்றும் கண்டங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மக்கள் மத்தியில் யோகாவை ஊக்குவிப்பதுடன், இந்த வருடமும் சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவை எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் தனது கடிதத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
Share This