புடினுக்கு அரியவகை நாய்களை பரிசாக வழங்கிய கிம் !

புடினுக்கு அரியவகை நாய்களை பரிசாக வழங்கிய கிம் !

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அரியவகை கொரிய நாய்களை பரிசாக வழங்கியுள்ளார்
பியோங்யாங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ​​இரு தலைவர்களும் பல்வேறு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.

ரஷ்ய ஜனாதிபதி புடின் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக வடகொரியாவுக்குச் சென்றார். பியாங்யாங்கில் புடினை கிம் பிரமாண்டமாக வரவேற்றார்.
வடகொரியாவில் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

புடினுக்கு ஒரு ஜோடி Pungsan நாய்கள் பரிசாக வழங்கப்பட்டன. கொரிய தீபகற்பத்தின் வடக்கே உள்ள மலைப்பகுதிகளில் பங்சன் இன நாய்கள் வாழ்கின்றன. அவை உறைபனி எதிர்ப்பு தோல் கொண்ட நாய்கள். அவைகளால் பாரிய விலங்குகளை கூட தாக்க முடியும். கொரியாவில் அவை வேட்டை நாய்களாக பயன்படுத்தப்படுகின்றன.

அவர் இந்த பயணத்தில் வட கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய இரண்டு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This