ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தாவும் ராஜபக்ச கட்சியின் உறுப்பினர்; வெற்றியடைந்த பேச்சுவார்த்தை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தாவும் ராஜபக்ச கட்சியின் உறுப்பினர்; வெற்றியடைந்த பேச்சுவார்த்தை

இலங்கை அரசியல் களம் நாளுக்கு நாள் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் பல கட்சித் தாவல்கள் இடம்பெற்று வருகின்றதை காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான பியங்கர ஜயரத்ன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக அவருடன் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, புத்தளம் மாவட்ட ஸ்ரீலங்கா தேசியக் கட்சியின் பிரநிதித்துவம் பியங்கர ஜயரத்னவுக்கு வழங்கப்படவுள்ளது.

அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் பணியாற்றுவதற்கு முன்னர் அமைச்சரவை அமைச்சராகவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் மாவட்டத் தலைவராகவும் நீண்ட காலம் பணியாற்றிய மூத்த அரசியல் பிரமுகர் ஆவார்.

2000ஆம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பியங்கர ஜயரத்ன வடமேற்கு மாகாண சபை உறுப்பினராகவும் அதற்கு முன்னர் மாகாண அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக பியங்கர ஜயரத்ன தனது அப்போதைய அமைச்சர் பதவியை 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இராஜினாமா செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This