இந்தியர்கள் ஈரான் செல்ல விசா தேவையில்லை!

இந்தியர்கள் ஈரான் செல்ல விசா தேவையில்லை!

டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய குடிமக்களுக்கான விசாவை ஈரான் அரசு நான்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெப்ரவரி 4-ம் திகதி முதல் ரத்து செய்துள்ளது. புதிய விதிகளின்படி சாதாரண பாஸ்போர்ட் வைத்தி ருக்கும் இந்தியர்கள் 6 மாதங் களுக்கு ஒருமுறை விசா இல்லா மல் ஈரானுக்குள் அனுமதிக்கப் படுவார்கள், இவர்கள் அதிகபட்சம் 15 நாட்கள் தங்கலாம்.

விமானம் மூலம் ஈரானுக்கு சுற்றுலா வரும் இந்தியர்களுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும். இந்தியர்கள் 15 நாட்களுக்கு மேல் தங்க விரும்பினாலோ அல்லது 6 மாதங்களுக்குள் பலமுறை வந்து செல்ல விரும்பினாலோ அவர்களுக்கு பிற வகை அனுமதி தேவை. அவர்கள் இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகங்களில் விசா பெறுவது அவசியம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய குடிமக்கள் மற்றும் ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவுதி, கத்தார், குவைத், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 32 நாடுகளின் மக்களுக்கு விசா தேவையை நீக்கும் முடிவை ஈரான் அரசு கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவித்தது.

ஈரானில் சுற்றுலாவை மேம் படுத்தவும் உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந் நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் எசதுல்லா ஜர்காமி கூறினார்.

சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, நடப்பு ஈரானிய ஆண்டின் முதல் 8 மாதங்களில் (மார்ச் 21 முதல்) ஈரானில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 44 லட்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்து எண்ணிக்கையை விட 48.5 சதவீதம் அதிகம். ஈரான் அரசு ஏற்கெனவே துருக்கி, அஜர்பைஜான், ஓமன், சீனா, ஆர்மீனியா, லெபனான், சிரியா ஆகிய நாடுகளின் மக்களுக்கு விசா தேவையை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This