தேசிய மக்கள் சக்தியில் இணையவுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்?

தேசிய மக்கள் சக்தியில் இணையவுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்?

தென்னிலங்கை அரசியலில் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அது அரசியலில் பல திசை திருப்பங்களை உருவாக்கி வருகிறது.

அண்மைய தினங்கள் வரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான விவாதம் பேசு பொருளாக அமைந்திருந்தது.

எனினும், தற்போது நாட்டின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் தேசிய மக்கள் சக்தியில் இணைய எதிர்ப்பார்த்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இணையவுள்ளவர்களின் பட்டியலில் பிரபல்யமானவர்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, குற்றப்புலனாய்வுப் பிரிவின் (CID) ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரவி செனவிரத்ன இதற்கு தலைமை வகிப்பதாக தெரியவந்துள்ளது.

இவருடன் இணைந்து மேலும் சில பொலிஸ் அதிகாரிகளக் தேசிய மக்கள் சக்தியில் இணைய எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிங்ஸ்லி விக்ரமசூரிய , காமினி நவரத்ன, சந்தன அழககோன் ஆகிய சிரேஷ்ட அதிகாரிகளும் தேசிய மக்கள் சக்தியில் இணையவுள்ளனர்.

இவர்களுக்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் தேசிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு இணைய எதிர்ப்பார்த்துள்ள அனைவரையும் அழைத்து எதிர்வரும் ஜூலை மாதம் 09ஆம் திகதி மஹரகமையில் மாநாடு ஒன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, 20 மாவட்டங்களை பிரநிதித்துவப்படுத்தக் கூடிய வகையில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

CATEGORIES
Share This