ரணிலுடன் இணைய முன் பசிலைச் சந்தித்த சம்பிக்க

ரணிலுடன் இணைய முன் பசிலைச் சந்தித்த சம்பிக்க

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் கடந்த செவ்வாய்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை சில தினங்களுக்கு முன்னர் இரண்டு தடவைகள் சந்தித்த பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் தலையீட்டில் சஜித் பிரேமதாசவுடன் சந்திப்புகள் இடம்பெற்றன.

சம்பிக்க ரணவக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய விருப்பம் தெரிவித்த போதிலும், சஜித் பிரேமதாச இது தொடர்பில் அக்கறை காட்டவில்லை.

இதையடுத்தே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க சம்பிக்க ரணவக்க தயாராகவுள்ளார்.

எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதால் ஏற்படும் முரண்பாடுகளை தீர்த்து வைக்கும் நோக்கில் பசில் ராஜபக்ஷவுடன் மேற்படி சந்திப்பு இடம்பெற்றதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பிக்க ரணவக்க, ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடியாக இணையாது நிமல் லான்சா உள்ளிட்டோரால் கட்டியெழுப்பப்பட்ட புதிய கூட்டணியில் இணையவுள்ளதாகவும், அதன் ஊடாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This