கோட்டாவின் உயிரை காப்பாற்றிய தேரர்

கோட்டாவின் உயிரை காப்பாற்றிய தேரர்

ஓமல்பே சோபித தேரரே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் உயிரை காப்பாற்றியதாக போராட்ட செயற்பாட்டாளர்களில் ஒருவரான ஸெஹான் மாலக்க தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தின் போது கோட்டாபயவை படுகொலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவை சோபித தேரர் காப்பாற்றினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வெளியேறுவதற்கு தேவையான ஆவணங்கள்

கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார அழுது புலம்பி தலைவரை காப்பாற்றுமாறு சோபித தேரரிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்ள சோபித தேரர் நடவடிக்கை எடுத்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெறவிருந்த பாரிய இரத்த வெள்ளத்தை தாம் உள்ளிட்ட சிலர் தடுத்ததாக செஹான் மாலக தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This