மீண்டும் சஜித்துக்கு சவால் விடுக்கும் அனுர: அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் வித்தியாசம் இல்லை

மீண்டும் சஜித்துக்கு சவால் விடுக்கும் அனுர: அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் வித்தியாசம் இல்லை

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தினுள் ஜனாதிபதியாக இருந்தாலும் பிரதமராக இருந்தாலும் யாராக இருந்தாலும் திருட்டு, இலஞ்சம், ஊழல் என்பவற்றுக்கு இடமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவர்களுக்கு அதிசொகுசு வாழ்க்கையை வாழ்வதை விட கடினமான வாழ்க்கையை அனுபவிக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தன்னுடைய சுய மரியாதை, மானம் பற்றி சிந்திக்காமல் அற்ப அரசியலில் ஈடுபடுவதாக வலியுறுத்திய அவர் ,அற்ப அரசியலால் இந்த நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு அனைவரும் கைகோர்த்து தம்மை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளை பின்பற்றாமல் மக்கள் சுயமரியாதையுடனும் , தன்னம்பிக்கையுடனும் பெருமிதத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென எதர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மதுபான அனுமதிப்பத்திரம் பெற்ற அமைச்சர் ஒருவர் கூட ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை என உறுதியளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சவால் விடுத்துள்ளார்.

சலுகைகளைப் பகிர்ந்து கொள்வதில் அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This