சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் நடேசனின் 20வது நினைவேந்தல் நிகழ்வு

சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் நடேசனின் 20வது நினைவேந்தல் நிகழ்வு

AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் நடேசனின் 20வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (31) மாலை திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.

மட்டக்களப்பில் 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This