அம்பானி குடும்ப வைபோகத்தின் பாடும் பாடகிக்கு இத்தனை கோடியா?

அம்பானி குடும்ப வைபோகத்தின் பாடும் பாடகிக்கு இத்தனை கோடியா?

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் ஜூலை 12-ந் திகதி நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் நடைபெற்றன
இத்தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதன்பிறகு முன் திருமண வைபவத்தில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன் ஆலியாபட் ஜான்விகபூர், கேத்ரீனா கைஃப் இயக்குனர் அட்லி உள்பட பல இந்தி திரையுலகத்தினர் கலந்துகொண்டனர்.

தற்போது பிரான்ஸ் கடற்கரையோர சொகுசு கப்பலில் 29-ந்தேதி முதல் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமண விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த திருமண விழா கொண்டாட்டத்தில் இன்னும் சில முக்கிய நபர்கள் விழாவை சிறப்பிக்க இருக்கிறார்கள்.
பல சிறந்த சர்வதேச நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை அலங்கரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இங்கிலாந்தை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரியும் கலந்துகொண்டு இசைமழை பொழிய உள்ளார்.

இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமண முந்தைய நாள் குரூஸ் பாஷில் நிகழ்ச்சியில் நடனமாட பிரபல பொப் நட்சத்திரம் ஷகிரா சுமார் 15 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

CATEGORIES
Share This