ஒரே வாரத்தில் இடிந்து விழுந்த 3 பாலங்கள்: மீண்டும் பீகாரில் தொடரும் பதற்றம் !

ஒரே வாரத்தில் இடிந்து விழுந்த 3 பாலங்கள்: மீண்டும் பீகாரில் தொடரும் பதற்றம் !

இந்தியா, பீகார் மாநிலம் சம்பாரன் மாவட்டதிலுள்ள மோதிஹாரி நகரில் கால்வாயொன்றின் மீது சுமார் ஒன்றரை கோடி செலவில் பாலமொன்று கட்டப்பட்டு வந்தது. அம்வா கிராமத்தை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் நோக்கிலேயே குறித்த பாலம் ஊரகப்பணித் துறையால் கட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் குறித்த பாலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்துள்ளது.

நேற்று முன்தினம், பீகாரின் சிவான் மாவட்டத்திலுள்ள தரவுண்டா மற்றும் மகாராஜ்கஞ்ச் ஆகிய கிராமங்களை இணைப்பதற்காக கால்வாயின் மீது அமைக்கப்பட்டிருந்த 45 வருடங்கள் பழைமையான பாலம் இடிந்து விழுந்தது.

அதேபோல் கடந்த 18ஆம் திகதியன்று அராரியா மாவட்டத்தில் குர்சா காந்தா, சிக்டி பகுதிகளை இணைக்கும் பக்ரா ஆற்றின் மீது நிர்மாணிக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இவ்வாறு ஒரே கிழமையில் அடுத்தடுத்ததாக 3 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

அதிர்ஷ்டவசமாக இந்த பாலங்கள் இடிந்து விழுந்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், இடிந்து விழும் அளவுக்கு பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

CATEGORIES
Share This