மோடியின் வெற்றி உறுதியானால் ரணில் டில்லி செல்வார்; அனுர லண்டனுக்குப் பயணம்

மோடியின் வெற்றி உறுதியானால் ரணில் டில்லி செல்வார்; அனுர லண்டனுக்குப் பயணம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசரமாக இந்திய பயணமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் லோக் சபா (நாடாளுமன்றம்) தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஒருமுறை தேர்தலில் வெற்றி பெறும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

அதன்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளும் நிகழ்வில் கலந்துக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக

மேலும், அதன் மூலம் இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்து ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஊடக நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஜேவிபியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தயின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இரு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, முதலில் அனுர குமார திஸாநாயக்க இங்கிலாந்துக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன் பின்னர் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் அவர் இந்தியா, சுவீடன் மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் அனுர குமார திஸாநாயக்கவும் போட்டியிட்டு வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட்டு வரும் நிலையில எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரையில் கிராமங்களுக்கு செல்ல திட்டமிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

CATEGORIES
Share This