அரசியலை தவிர்த்து பாடகரானாரா விமல்?; புதிய பாடலையும் வெளியிட்டுள்ளார்
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் பாடலொன்று இன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
குறித்த பாடல் வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பாடலை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவே எழுதி, தனது குரலால் பாடியுள்ளார்.
வெவ்வேறு மனங்களை கொண்டவர்கள் இந்த மண்ணில் வாழ்க்கின்றார்கள். அனைத்து மக்களுக்கும் தியானத்தின் மகிமையை பிரதிபளிக்கும் நோக்கில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு வீட்டிற்கு முற்றம் எவ்வளவு முக்கியம். நான் முற்றத்தில் இருந்து எவ்வளவு விடயங்களை யோசிக்கின்றோம். மனித மனமும் சில சமயங்களில் முற்றத்தை போன்றது தான். காரணம் சில நேரங்களில் ஆசைகள் எழுகின்றன. சில நேரங்களில் விரக்தி ஏற்படுகின்றது. இதை பிரதிபலிக்கும் விதமாக இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது.
என்னதான் வாழ்க்கை வாழ்ந்தாலும் தவத்தை புரிந்து கொண்ட மனதால் மட்டுமே உண்மையான சுகத்தை அனுபவிக்க முடியும். மேலும் பௌத்தத்தை முழுமையாக நேசிப்பவர்களுக்கு அது ஒரு நாள் தெரியும். இப்பாடல் ஒரு நித்திய உண்மை எனவும் பொருள்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருப்பதோடு வரவேற்பும் அளித்துள்ளனர்.
திடீரென இவ்வாறு ஒரு பாடலை வெளியிட்டதால் விமல் அரசியலிலில் இருந்து விலகிவிட்டதாகவும் வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.