மன்னாரில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மன்னாரில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூரும் 15ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் இன்று சனிக்கிழமை (18) காலை 9 மணியளவில் மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. 

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மன்னார் கிளையினது ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. 

இக்கட்சியின் மன்னார் கிளை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சார்ள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் மன்னார் நகர் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலையருகே இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

பின்னர், மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. 

இந்த நினைவேந்தலில் அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
Share This