வாழைச்சேனையில் நாய்கள் பராமரிப்பு நிலையம் ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வைபவ ரீதியாக திறப்பு

வாழைச்சேனையில் நாய்கள் பராமரிப்பு நிலையம் ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வைபவ ரீதியாக திறப்பு

வாழைச்சேனை குகதர்சன்

கோறளைப்பற்று பிரதேசத்தில் காணப்படும் கட்டாக்காலி நாய்கள் பராமரிப்பின்றியும் கவனிப்பாரற்று பொது இடங்களில் காணப்படும் நாய்களை பராமரிப்பதற்கென்று இவ் பராமரிப்பு நிலையம் ஆளுநரின் ஆலோசனையுடன் கிழக்கில் முதல் நிலையமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் இவ்வாறான காப்பகங்களை திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை தெரு நாய்களின் தொல்லையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண அளுநர் தமது உரையின் போது தெரிவித்தார்.

இவ் பராமரிப்பு நிலையத்தில் நோயுள்ள நாய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்துதல், காயங்களுக்கு மருந்து கட்டுதல்,கருத்தடை போன்ற மருத்துவ சேவைகள் மற்றும் நாய்களை தமது வளர்பிற்காக பெற்றுக் கொள்பவர்களும் பலன் பெறுவதற்கு ஏற்ற வகையில் இவ் காப்பகம் திறந்து வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.நவநீதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாகவும்.கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளரும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளருமாகிய என்.மணிவண்ணன் கௌரவ அதிதியாகவும் மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ் உட்பட வாழைச்சேனை சுகாதர வைத்தியஅதிகாரி,கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் உள்ளுராட்சி திணைக்களத்தின் செயலாளர்களும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This