சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்
முள்ளிவாய்க்கால் தமிழன படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறவுள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளது.
கடற்கரையோரத்திற்கு மக்களை நெருக்கித் தள்ளினார்கள். மணற்வெளியில் ஒளிந்துகொள்ள இடமின்றி குழந்தைகளோடும், கோடைகால வெப்பத்துடனும் குண்டுமழையை எதிர்கொண்டார்கள். மே15ம் தேதி, இனப்.படுகொலை நடக்க இருக்கிறதென ஐ.நாவிற்கான இனப்படுகொலை தடுப்பு மேற்பார்வையாளர் பதறிப்போய் அறிக்கை வெளியிடுகிறார்.
இதற்கு முதல்நாள் மே 14ம் தேதி, போர்ச்சூழலில் சிக்குண்ட குழந்தைகளுக்கான ஐ.நா மேற்பார்வையாளர் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தென எச்சரிக்கிறார். ஐ.நாவின் தலைமைச் செயலாளர், போர்முனைக்குச் சென்று மக்களை பாதுகாக்க மேற்பார்வையிட தனது துணை அதிகாரியான விஜய் நம்பியாரை அனுப்பி வைக்கிறார். போர் நிறுத்தத்திற்கும், மக்கள் பாதுகாப்பிற்குமான கோரிக்கையை நிராகரித்து படைகள் முன்னர்கின்றன.
வெய்யில் அதிகமாக இருக்கிறதென்று சொல்லி விஜய்நம்பியார் தனது அறையை விட்டு வெளியேற மறுக்கிறார். துப்பாக்கிகளை மெளனிக்கிறோம் மக்களை காத்திடுங்கள் என சாட்சிகள் முன்னிலையில் வாக்குறுதி பெற்று வெளியே வருகிறவர்களை குண்டுகள் துளைக்கின்றன. சிரித்த முகத்துடன் மரணத்தை தழுவி நிற்கிறார்கள். கடலிலிருந்து குண்டுகள் கடற்கரையை நோக்கி ஏவப்படுகிறது. நிலத்திலிருந்து விநாடிக்கு ஒரு ராக்கெட் என நிமிடத்திற்கு 60 குண்டுகளை மெரினா கடற்கரையை விட குறுகிய நிலத்தில் 4 லட்சம் மக்கள் மீது எறிந்து கொண்டிருக்கிறார்கள்
. வானிலிருந்து ட்ரோன்கள் கண்காணிக்க யுக்ரேனிய விமானிகள் ஓட்டிய இசுரேலிய கிஃபிர் விமானித்திருந்து, இந்திய ராடார்களின் துணையோடு குண்டுகள் வீசப்படுகின்றன. ஐ.நா அதிகாரிகள் தலைநகரில் ஓய்வெடுக்க, அமெரிக்காவின் ஆகப்பெரும் பசிபிக் கடற்படையின் தலைமை அதிகாரி வந்திறங்குகிறார்.
ஐ.நாவால் போர் தடுப்பிற்கு அனுப்பப்பட்ட விஜய் நம்பியாரின் உடன்பிறந்த அண்ணன் சதீஷ்நம்பியார் எட்டு ஆண்டுகளாக வழிநடத்திய இராணுவத்தின் தளபதிகள் வெள்ளைக்கொடிகளை குருதியால் சிவப்பாக்கிக் கொண்டிருக்க, ஐ.நாவின் மனித உரிமை அவையில் இந்த போரை பாராட்டி தீர்மானத்தை முன்னகர்த்திக் கொண்டிருந்தார்கள்.
இன்று இதேபோன்று மிகக்குறுகிய நிலத்திற்குள் பால.ஸ்தீன மக்களை நெருக்கித்தள்ளி படைகளை ஏவி இருக்கிறார்கள். மே6ம் தேதி முன்னர்ந்த படைகள் தாக்குதலை தீவிரமடையச் செய்திருக்கின்றன.
ராஃபா என்பதும், முள்ளி.வாய்க்கால் என்பதும் உலகின் வெவ்வேறு பகுதியில் இருந்தாலும், அங்கே சிதறிக்கொண்டிருப்பது மனிதம் தான். உலகெங்கும் ரஃபாவிற்காக குரல்கள் உயர்கின்றன. பால.ஸ்.தீனத்தின் முள்ளி.வாய்க்காலாக ரஃபா வேட்டையாடப்படுகிறது. மெளனம் கலைத்து எழுந்து நிற்போம்.
தமிழின இனப்படுகொலையை, உலகிற்கு நினைவூட்ட மே19ம் தேதி சென்னை பெசண்ட்நகர் கடற்கரைக்கு அழைக்கிறோம்.