பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு அதிகரிப்பு: பிரித்தானியாவில் கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள்
பெண்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைச் செயல்களை பயங்கரவாதச் செயல்களாகக் கருதும் வகையில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த பிரித்தானிய அரசு தயாராகி வருகிறது.
பிரித்தானிய அரசாங்கம் முதன்முறையாக இவ்வாறானதொரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அண்மைய நாட்களாக பெண்கள் மற்றும் சிறுமிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்கள் பிரித்தானியாவில் அதிகரித்துள்ளன.
கடந்த மாதம் இறுதிப் பகுதியில் மூன்று சிறுமிகள் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், அவர்கள் மூவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் பாரிய வனமுறைகள் வெடித்திருந்தன.
2011 லண்டன் கலவரத்திற்குப் பிறகு பிரித்தானியாவில் பதிவாகியுள்ள மோசமான வன்முறை இதுவாகும். இதனால் பல நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, போக்குவரத்து வலையமைப்பில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 20 வீதம் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய போக்குவரத்துக் காவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 11,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், ஆண்டில் 9,464 முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.