மயிலத்தமடு விவகாரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதி வருகைதந்த போது கொம்மாதுறை பகுதியில் – மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை விவகாரத்திற்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பாக்கிய
செல்வம் அரியநேந்திரன், ஞானமுத்து சிறிநேசன் , முன்னாள் மாகாணசபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திர குமார், தர்மலிங்கம் சுரேஸ், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று புதன் கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கெள்ளப்பட்டது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையானது எதிர்வரும் ஜூலை மாதம் 10ம்திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.