தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை சந்தித்தார் டொனால்ட் லு
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பானது கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இதன் போது அமெரிக்கத்தூதர் ஜூலி சங்கும் கலந்துகொண்டார்.
தேசிய மக்கள் சக்தியின் தேசியக் செயற்குழு உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், வசந்த சமரசிங்க, கலாநிதி நளிந்த ஜெயதிஸ்ஸ, ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை, சர்வதேச நாணய நிதியத்தின் ஈடுபாடு, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துதல் மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் பாதுகாப்பு செயற்பாடுகள் உள்ளிட்ட விடயப்பரப்புகள் இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.