பொலிஸாரின் அத்துமீறல்களை ஜனாதிபதி கட்டுப்படுத்த வேண்டும்; இல்லையேல் கசப்பான அரசியல் பாடம் புகட்டப்படும்
தமிழர் தாயகத்தில் தமது உறவுகளை நினைவேந்தும் மக்களின் உரிமையை அடக்குமுறைச் சட்டங்களை ஏவி மறுப்பது நாட்டில் அமைதி, சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைத்து விடும் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் தமது உறவுகளை நினைவேந்தும் போது நிதானத்தோடும் தார்மீகத்தோடும் அணுகும்படி பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டளையிட வேண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இந்த செயற்பாட்டிலிருந்து தவறுவாரேயானால் முன்னர் தமிழர்களிடம் அரசியல் பாடம் படித்த கசப்பான அனுபவம் போன்ற ஒரு பட்டறிவை திரும்பவும் அவர் பெற வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டு விடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
CATEGORIES செய்திகள்