பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை : சம்பந்தன் அறிவிப்பு

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை : சம்பந்தன் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரணில், சஜித், அநுர ஆகிய மூவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்றார்கள் என்றால் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக எவ்விதமான விடயங்களையும் கருமங்களையும் முன்வைக்கப்போகின்றார்கள் என்பதை தமது விஞ்ஞாபனங்களில் வெளிப்படுத்த வேண்டும்.

அதன் பின்னர் எமது மக்களின் நிலைப்பாடுகளை புரிந்து நாம் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This