ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கை இராணுவம்; தினம் தினம் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கை இராணுவம்; தினம் தினம் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

ரஷ்ய – உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக ஆட்கடத்தற்காரர்களால் அனுப்பட்ட இலங்கை இராணுவ வீரர்களை மீட்பதற்கு இராஜதந்திர மட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கும் பதிலிளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் ரஷ்யாவிற்கு பணிபுரிவதற்காகச் சென்ற இலங்கையர்களும் அந்நாட்டின் இராணுவத்துடன் இணைந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மற்றுமொரு இலங்கையர் பற்றிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.வலஸ்முல்லை உடதெனிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரஷ்யாவிலுள்ள தனியார் நிறுவனமொன்றிற்கு பணிய புரியச் சென்ற நிலையில் ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர் தனது வேலையிலிருந்து விலகி ரஷ்ய இராணுவப் பணியில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்ய – உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக

ஆட்கடத்தற்காரர்களால் அனுப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் தொடர்பில் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின்றது.

CATEGORIES
Share This