மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வு சிவில் அமைப்புக்களினால் ஆரம்பம்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வு சிவில் அமைப்புக்களினால் ஆரம்பம்!

மே-18,முள்ளி வாய்க்கால் கஞ்சி வார நிகழ்வு இன்று (12) மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதி சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தொணிப் பொருளில் மட்டக்களப்பு சிவில் அமைப்பினால் இவ் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மே-18 என இலக்கம் பொறிக்கப்பட்ட பானையில் கஞ்சி காச்சப்பட்டு வீதியில் சென்றோர்களுக்கு பரிமாறப்பட்டது.

அத்துடன் முள்ளி வாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தலைப்பிலான துண்டு பிரசுரங்களும் மக்களின் பார்வைக்கு விநியோகிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மரணமும் பசியும் சூழ்ந்திருந்தது.

அந்த வேளை பணத்திற்கு எந்த பெறுமதியும் இருக்கவில்லை.வாங்குவதற்கு எந்த உணவுப் பொருளும் இருக்கவில்லை.

இந் நிலையில்தான் வன்னி நிலப்பரப்பில் மக்கள் தம் உயிர் பிழைப்புக்கென முள்ளி வாய்க்கால் கஞ்சி என்கின்ற ஜீவாமிர்தத்தை அறிமுகப்படுத்தினர்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் கஞ்சி வாரமானது எதிர் வரும் மே-18 ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This