இரண்டாவது விருப்பு வாக்கு: எண்ணுவதற்கு கோடி கணக்கில் நிதி செலவாகும்

இரண்டாவது விருப்பு வாக்கு: எண்ணுவதற்கு கோடி கணக்கில் நிதி செலவாகும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 50 வீத வாக்குகளை எந்தவொரு கட்சியும் பெற்றுக்கொள்ளாது இரண்டாவது விருப்ப வாக்கை எண்ணும் சூழ்நிலை ஏற்பட்டால் கோடி கணக்கில் நிதி செலவாக வாய்ப்புள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அதேபோன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாமல் ராஜபக்சவும் போட்டியிடுகிறார்.

இதனால் பிரதான வேட்பாளர் ஒருவர் 50 வீத வாக்குகளை பெற்றுக்கொள்வதில் சிக்கலான நிலைமை ஏற்பட்டால் இரண்டாவது விருப்ப வாக்கை எண்ணும் சூழ்நிலை ஏற்படலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சூழ்நிலையொன்று ஏற்பட்டால் பெறுபேறுகளை தெரிந்துக்கொள்ள அதிக மணித்தியாலங்கள் ஏற்படும் என்பதுடன், வாக்கு எண்ணிக்கைக்கு அதிக காலமும் கோடிக்கணக்கான நிதியும் செலவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கிடைக்கப்பெறும் பெறுபேறுகளின் பிரகாரம் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவும் தேர்தல் திணைக்களமும் தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
Share This