தமிழ் பொது வேட்பாளர் வியாபாரத்துடன் கார் வாங்கிய சிவில் சமூக உறுப்பினர்!

தமிழ் பொது வேட்பாளர் வியாபாரத்துடன் கார் வாங்கிய சிவில் சமூக உறுப்பினர்!

அண்மையில் பேசுபொருளாகிய தமிழ் பொதுவேட்பாளர் கோசத்தை முன்னெடுக்கும் சிவில் சமூக பிரதிநிதியொருவர் சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

குறிப்பிடத்தக்க வேலையும் இல்லாத இந்த நபரின் வங்கிக் கணக்கில் பணப்புழக்கம் அதிகமாக இருந்ததையடுத்து, பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் சந்தேகமடைந்து, வங்கிக் கணக்கை முடக்கி, அவரை கொழும்புக்கு அழைத்து விசாரணை செய்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.

தமிழ் பொதுவேட்பாளர் கோசத்தை கட்டுரைகளாகவும், மேடைகளிலும் தீவிரமாக முன்னெடுக்கும்- தன்னை சிவில் சமூக பிரதிநிதியாக அடையாளப்படுத்தும் நபர் ஒருவர்- அண்மையில் சுமார் 70 இலட்சம் ரூபா செலவில் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தை முன்னெடுக்கும் யாழ்ப்பாண வர்த்தகர் ஒருவரின் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்த சிவில் சமூக பிரதிநிதி, கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் அண்மையில் நபர் ஒருவரை சந்தித்த பின்னர், அவசரஅவசரமாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் கார் வாங்கிய போது, அவருக்கு கார் ஓட்ட தெரியாது. சாரதி அனுமதிப்பத்திரமும் கிடையாது.

பிறிதொருவரின் உதவியுடன் காரை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அவரது வங்கிக்கணக்கில் திடீரென அதிக பணப்புழக்கம் நிலவியதால், அண்மையில் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி நிதியளிப்பு மூலங்களை வெளிப்படுத்திய பின்னர், வங்கிக்கணக்கு விடுவிக்கப்பட்டு, அவர் மீதான விசாரணைகள் முடிவுக்கு வந்ததை நம்பகரமாக அறிந்தது.

CATEGORIES
Share This