சந்திரிக்கா தலைமையிலான அணி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைகின்றதா?:
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியினர் ஐக்கிய மக்கள் சகத்தியில் இணையவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச சூட்சகமாகத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பிரகடனத்தை அம்பாரையில் முன்வைத்து உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அம்பாறை சேனநாயக்க சமுத்திர குளத்திற்கு டி.எஸ்.சேனாநாயக்க நடவடிக்கை எடுத்து பாரிய நீர்ப்பாசன நாகரீகத்தை கட்டியெழுப்பியிருந்தார்.
அதேபோல், டட்லி சேனாநாயக்க படல்கம நீர்த்தேக்கம், அம்பலன் ஓயா, லொக்கல் ஓயா மற்றும் பல்லம் ஓயா போன்றவற்றை உருவாக்கினார்.
அம்பாறை நாமல் ஓயா திட்டத்தை சிறிமாவோ பண்டாரநாயக்க அமுல்படுத்தினார். அனைத்து வளங்களையும் பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்கும் கட்சியாக எமது கட்சி இருக்காது.
ஆனால் நாட்டின் தலைமைக்கு மாற்றாக தம்மைக் கூறிக்கொள்ளும் சோசலிச தலைவர்கள் என அழைக்கப்படுபவர்களும் தேசிய சொத்துகளை விற்க இணங்கியுள்ளனர்.
விவசாயம் தொடர்பான அனைத்து நிறுவனங்களான காணி, நில அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி போன்ற அனைத்து நிறுவனங்களும் தமது அரசாங்கத்தின் கீழ் ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.