இரத்தினபுரி தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்!; மீண்டும் அமைதியின்மை!

இரத்தினபுரி தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்!; மீண்டும் அமைதியின்மை!

இரத்தினபுரி இங்கிரிய தும்பறை பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த பிரதேசத்திற்கு (10) தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் ஆகியோர் களத்திற்கு சென்று தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார் .

இதன்போது, தோட்ட நிர்வாகத்திற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

மக்கள் பிரதிநிதிகளையும் பொலிஸாரையும் மதிக்க தெரியாத முகாமையாளர் இந்த மக்களை எவ்வாறு நடத்துவார் என்பது இதில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை தோட்ட முகாமையாளரை பொதுமக்களும் பாராளுமன்ற உறுபாபினர்களான மனோ கணேசன் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் முற்றுகையிட்டனர்.

CATEGORIES
Share This