மட்டு முகத்துவார வெளிச்ச வீட்டுக்கு வர்ணம் பூசும் நடவடிக்கை; அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!

மட்டு முகத்துவார வெளிச்ச வீட்டுக்கு வர்ணம் பூசும் நடவடிக்கை; அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!

மட்டக்களப்பு (Batticaloa) – முகத்துவாரம் வெளிச்ச வீட்டுக்கு வர்ணம் பூசுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு முகத்துவாரம் வெளிச்ச வீட்டு (Light house) பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

வெளிச்ச வீட்டுக்கு வர்ணம் பூசித்தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இருபது வருடங்களுக்கு மேலாக வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

110 வருடங்கள் பழைமை வாய்ந்த வெளிச்ச வீடு, கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வர்ணம் பூசாமல் பழுதடைந்த நிலையில் இருப்பதை அவதானித்த அமைச்சர், உடனடியாக வர்ணம் பூசுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், வெளிச்ச வீட்டுக்கும் நாவலடி கடற்பகுதிக்கும் இடையே உள்ள ஏரிப்பகுதியை ஆழப்படுத்தி தருமாறு கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அதனையும் அமைச்சர் கவனத்தில் எடுத்துள்ளார்.

CATEGORIES
Share This