வேட்பாளர்களுக்கான நேரடி விவாதம்: மார்ச் 12 இயக்கம் தயார்

வேட்பாளர்களுக்கான நேரடி விவாதம்: மார்ச் 12 இயக்கம் தயார்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நேரடி விவாதம் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. மார்ச் 12 இயக்கம் இந்த தொடர் விவாதங்களை நடத்தவுள்ளது.

முதல் நாள் விவாதத்தில் நான்கு வேட்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ச, சர்வஜன பலய கட்சியின் வேட்பாளர் திலித் ஜயவீர , சுயாதீன வேட்பாளர் பா. அரியநேத்திரன் ஆகியோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியாது என சுயாதீனமாக களமிறங்கியுள்ள வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த அமைப்புக்கு அறிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்பட உள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த விவாதத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட விவாதத்தில் 12 வேட்பாளர்கள் பங்கேற்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவாதங்கள் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

மார்ச் 12 பிரச்சாரம் மேலும் விவாதத்தின் போது வேட்பாளர்களுக்கு கேள்விகளை சமர்ப்பிக்க வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் கேட்கப்படும் கேள்விகளை ஒரு குழு தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This