அம்பாறையில் இரு பஸ்கள் மோதி விபத்து ; 23 பேர் வைத்தியசாலையில்!

அம்பாறையில் இரு பஸ்கள் மோதி விபத்து ; 23 பேர் வைத்தியசாலையில்!

இ.போ.ச பஸ் ஒன்று பாடசாலை பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில் அம்பாறை – கல்ஓயா பாலத்திற்கு அருகில் இன்று (03)  பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் அவர்களில் பாடசாலை மாணவர்களும் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

CATEGORIES
Share This