இன்று பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

இன்று பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தை இன்று திங்கட்கிழமை (29) கலைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இடம்பெற்ற அவசர சந்திப்பின் பின்னணியிலேயே இவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், இந்நாட்டின் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் பல சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

முதற்கட்டமாக பாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரசியலமைப்பு ரீதியாக, ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை நடத்தப்பட வேண்டும்.

அதற்கு முன்னதாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This