பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

இன்று நடைபெறவிருந்த சம்பள உயர்வு பேச்சுவார்தைக்கு முதலாளிமார் சம்மேளத்தின் நிறைவேற்று அதிகாரிகள் எவரும் கலந்துக்கொள்ள வில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கொழும்பில் இன்று (24) புதன்கிழமை காலை சம்பள நிர்ணய சபையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தைக்கு பெருந்தோட்ட கம்பனி அதிகாரிகள் வருகை தரவில்லை என்பதால் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தொழிற்சங்க சார்பில் கலந்து கொள்ளும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெறவிருந்த சம்பள பேச்சுவார்த்தை சம்பந்தமாக அவரிடம் வினவியப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் இரண்டாவது முறையாகவும் பெருந்தோட்ட கம்பனிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாது புறக்கணித்துள்ளது. இந்த நிலையில் இவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் மீதும் சம்பள விடயத்திலிலும் எதுவித அக்கறையும் காட்டவில்லை. என்பது தெளிவாக தெரிகின்றது.

இந்த விடயத்தில் கம்பனிகாரர்களை மாத்திரம் குறை கூறுவதற்கு அப்பால் அரசாங்கமும் தோட்டத் தொழிலாளர்களை புறம்தள்ளி பார்க்கின்றனர். என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த முறை இடம்பெற்ற தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை கம்பனிகள் புறக்கணித்தமையை அடுத்து இந்த விடயம் சம்பள நிர்ணய சபைக்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கான பேச்சு வார்த்தைக்கு இன்று திகதி குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சம்பள நிர்ணய சபையில் இன்று சம்பள பிரச்சினை பேசுவதற்கு தொழிற்சங்க சார்பில் கலந்து கொள்ளும் தொழிற்சங்கங்கள் சபைக்கு சென்றிருந்த நிலையில் அங்கு தோட்ட முதலாளிமார்

சம்மேளத்தினர் பக்கத்தில் ஒரு உரிமையாளர் மாத்திரமே கலந்து கொண்டிருந்தார். ஏனைய கம்பனி முதலாளிமார்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

இதற்கு காரணம் சம்பள நிர்ணய சபை ஊடாக ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை உயர் நீதிமன்றம் ஊடாக பெற்ற விடயத்தையும் உயர்நீதிமன்றத்தின் செயற்பாட்டை காரணம் காட்டியும் தாம் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள வில்லை. என்ற காரணமும் கம்பனிகள் காட்டியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என்பதுடன் இது தொடர்பாக தொழில் அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள தாக அவர் கூறினார்.

மேலும், சம்பள நிர்ணய சபையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இச்சபையின் செயலாளர் அழைப்பு விடுத்தால்கம்பனிகள்,தொழிற்சங்கங்கள் வந்து கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால் கம்பனிகள் வரவில்லை. இது எமக்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில் அரசாங்கம் பெருந்தோட்ட கம்பணிகளின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளதாகவும்,பெருந்தோட்ட தொழிலாளர் மக்களுக்கு அரசாங்கமும் அநீதி இழைப்பதாகவும் இதன் போது அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This