உயிர்த்த குண்டு தாக்குதல் சம்பவம் : சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று ஆரம்பம்

உயிர்த்த குண்டு தாக்குதல் சம்பவம் : சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று ஆரம்பம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.

இன்று புதன்கிழமை காலை 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரையான காலப் பகுதியில் குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு,நஞ்சு வகைகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் பற்றிய கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதனை தொடர்ந்து காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரையான காலப் பகுதியில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 22338\39 ஆம் இலக்க வர்த்தமானி மற்றும் 2352\29 ஆம் இலக்க வர்த்தமானி ஆகியவற்றில் வெளியிடப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகள்,மதுவரிச் சட்டத்தின் கீழ் 2361\44 இலக்க வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட அறிவித்தல்,குடிவருவோர் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதிக்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணி வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதம் இடம்பெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை (26) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தின் மூன்றாவது நாள் விவாதம் இடம்பெறவுள்ளது.

CATEGORIES
Share This