தியத்தலாவை துயரச் சம்பவம் பற்றி வௌியான தகவல்

தியத்தலாவை துயரச் சம்பவம் பற்றி வௌியான தகவல்

தியத்தலாவை பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 23 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2024 பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயம் இன்று காலை தியத்தலாவை நரியகந்த பந்தய திடலில் ஆரம்பமானது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்த பந்தயம் இறுதியாக கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட நிலையில் அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதன்படி 5 வருடங்களாக போட்டிகள் நடத்தப்படவில்லை எனவும், இம்முறை போட்டிக்கு அதிகளவான பங்கேற்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இன்று (21) காலை ஆரம்பமான இப்போட்டியில் கார் ஒன்று பந்தய திடலை விட்டு விலகி பயணித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 7 பேரில் 8 வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 4 பந்தய உதவியாளர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விபத்தின் பின்னர் பந்தயத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

CATEGORIES
Share This