ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து பொறுப்புக் கூறல் அவசியம்: ஐ.நா வலியுறுத்து

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து பொறுப்புக் கூறல் அவசியம்: ஐ.நா வலியுறுத்து

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ரே பிரான்சே (Marc-André Franche) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பதற்கு முழுமையான வெளிப்படையான விசாரணைகள் அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்ச்சியாக பொறுப்புக்கூறல் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றது, அது பொறுப்புக்கூறலிற்கான பொறுப்புக்கூறலாகயிருக்கலாம் அல்லது சமீபத்தைய மனித உரிமை மீறல்களிற்கான பொறுப்புக்கூறலாகயிருக்கலாம் என ஐ.நாவின் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.

நாடு முன்னோக்கி நகரவேண்டுமென்றால் அதற்கு தீர்வை காணவேண்டும் எனவும், இலங்கையின் உயர்நீதிமன்ற தாக்குதலை தடுக்கதவறினார்கள் என முன்னாள் அதிபர் மற்றும் உயர் அதிகாரிகளிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள போதிலும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக இன்னமும் காத்திருக்கின்றனர் என குறிப்பிட்டார்.

சவால்களிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளின் ஒருபகுதியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்படுதல் காணப்படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This