போர் களத்தில் ஓய்வு பெற்ற இலங்கை வீரர்கள்; பொறுப்பு கூறவேண்டியது யார்?; தேசிய அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

போர் களத்தில் ஓய்வு பெற்ற இலங்கை வீரர்கள்; பொறுப்பு கூறவேண்டியது யார்?; தேசிய அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ரஷ்ய – உக்ரைன் மோதலில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் ஓய்வு பெற்ற வீரர்கள் இணைந்துள்ளமைக்கு கடந்த கால அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உலகளாவிய இலங்கை மன்றத்தின் நிறைவேற்றுச் செயலாளர் யசஸ் தர்மதாச, இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர், ரக்னா லங்கா மற்றும் அவன்கார்ட் ஆகிய நிறுவனங்கள் ஓய்வுபெறும் இராணுவத்தினருக்கு வேலைகளை வழங்கியது.

ரஷ்ய மற்றும் உக்ரேனிய கூலிப்படையினருக்கு நிகரான சம்பளத்தை அவன்கார்ட் நிறுவனம் வழங்கியதாகவும் அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், தேசிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால், இந்த சந்தர்ப்பங்கள் அனைத்தும் இழக்கப்பட்டதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி, அவன்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக மேற்கொண்ட அவதூறு பிரச்சாரத்தினால் இழப்புகள் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவன்ட்கார்ட் திட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணியின் தலையீடுகள் தொடர்பில் அதன் தலைவர் நிஷங்க சேனாதிபதி வெளியிட்ட கருத்துகளையும் தர்மதாச வலியுறுத்தியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, மறைந்த மங்கள சமரவீர உள்ளிட்டவர்கள் பொறுப்பு கூறவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

போர்க்களத்தில் நிகழும் அவல வாழ்க்கைக்கு கூலித்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் அமைப்புகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும்தான் பொறுப்பு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This