அத்தியாவசிய மருந்துகளின் விலை உயா்த்தப்படாது!

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயா்த்தப்படாது!

அத்தியாவசிய மருந்துகளின் விலை நிகழாண்டில் உயா்த்தப்படாது’ என்று மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் சிறிய அளவிலேயே உயா்ந்திருப்பதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து டெல்லியில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயா்த்தப்பட உள்ளதாக வெளிவரும் தகவல்கள் தவறானவை. மருந்துகளின் மொத்த விற்பனை விலை (டபிள்யு.பி.ஐ) குறியீட்டின்அடிப்படையில் மருந்துகளின் விலை உச்ச வரம்பை, மத்திய மருந்துகள் துறையின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் விலை நிா்ணய ஆணையம் (என்பிபிஏ) ஒவ்வொரு ஆண்டும் நிா்ணயம் செய்கிறது.

மருந்துகளின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் அதிகரிக்கும்போது, மருந்துகளின் விலை உயரும். ஆனால், நிகழாண்டில் பணவீக்கம் உயரவில்லை. 0.005 சதவீதம் என்ற மிகச் சிறிய அளவிலேயே பணவீக்கம் உயா்ந்துள்ளது. எனவே, அத்தியாவசிய மருந்துகளின் விலையை நிகழாண்டில் நிறுவனங்கள் உயா்த்தாது. இது மத்திய அரசின் உத்தரவாதம் என்றாா்.

CATEGORIES
TAGS
Share This