ராகுல் காந்திக்கு சொந்த கார், அடுக்குமாடி குடியிருப்பு இல்லை!

ராகுல் காந்திக்கு சொந்த கார், அடுக்குமாடி குடியிருப்பு இல்லை!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் வாகன பேரணி மேற்கொண்டு பின்னர் மனு தாக்கல் செய்தார்.

மனு தாக்கல் செய்தபோது சொத்து மதிப்பு தொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் பின் வருமாறு:-

  1. அசையும் சொத்துக்களின் மதிப்பு 9.24 கோடி ரூபாய் ஆகும்.
  2. அசையா சொத்துக்களின் மதிப்பு 11.15 கோடி ரூபாய் ஆகும்.
  3. சொந்த வாகனம் கிடையாது.

  1. அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது.
  2. கையில் 55 ஆயிரம் ரூபாய் உள்ளது.
  3. வங்கியில் 26.25 லட்சம் ரூபாய் டெபாசிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
  4. 4.33 கோடி ரூபாய் மதிப்பில் பத்திரங்கள் மற்றும் பங்குகள் உள்ளன.
  5. 3.81 கோடி ரூபாய் மதிப்பில் மியூட்சுவல் நிதி உள்ளது.
  6. 15.21 லட்சம் ரூபாய் மதிப்பில் கோல்டு பத்திரம் உள்ளது.
  7. 4.20 லட்சம் ரூபாய் அளவில் நகைகள் உள்ளன.
  8. 9 கோடி ரூபாய் மதிப்பில் குருகிராமில் சொந்த அலுவலகம் உள்ளது.
  9. தனது சகோதரியுடன் இணைந்து விவசாய நிலம் உள்ளது.

இவ்வாறு ராகுல் காந்தி அதில் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியை எதிர்த்து சிபிஐ தலைவர் ஆனி ராஜா களம் இறங்கியுள்ளார். பா.ஜனதா அம்மாநில தலைவர் கே, சுரேந்திரனை களம் இறக்கியுள்ளது. வயநாடு தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ந்தேி நடக்கிறது.

CATEGORIES
TAGS
Share This