தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: ரணில் அறிவிப்பு?

தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: ரணில் அறிவிப்பு?

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார், எனவே அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை நடைமுறையில் உள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிதியச் செயற்பாட்டின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நேரம் வருவதால் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு அதிபர் தேர்தல் தடையாக இருக்காது எனத் தெரிவித்த ஜனாதிபதி , அதற்கேற்ப தேர்தல் வரைபடத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி தேர்தலுக்கு முதலில் தயாராகுமாறு அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்பதை இது தெளிவாகக் காட்டுவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This