ஜேர்மனில் விமான ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
ஜேர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், ஈஸ்டர் விடுமுறைக்காக பயணம் செய்வோர் பாதிக்கப்படும் ஒரு நிலை உருவானது.இந்நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவந்த Verdi தொழிலாளர் யூனியனுக்கும் Lufthansa விமான நிறுவனத்துக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாடு, புதன்கிழமையே எட்டியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஆகவே, ஈஸ்டர் பண்டிகை நாட்களையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்வோர் விடுமுறைக்காக செல்வோர் பாதிக்கப்படும் அபாயம் நீங்கியுள்ளது எனலாம்.
என்ன விதமான வாகுறுதிகளை Lufthansa விமான நிறுவனம் அளித்துள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அத்துடன், சில குறிப்பிட்ட பிரிவு ஊழியர்களுடன் ஈஸ்டர் பண்டிகைக்குப் பிறகு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எப்படியும், புதன்கிழமை வெளியான அறிவிப்பு ஈஸ்டர் பண்டிகையையொட்டி பயணம் மேற்கொள்ள இருந்த பயணிகளுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.