போருக்கு இடையே ரமலான்: காஸாவின் துயர்!

போருக்கு இடையே ரமலான்: காஸாவின் துயர்!

போருக்கு மத்தியில் காஸாவில் இஸ்லாமியர்களின் புனித நோன்பான ரமலான் தொடங்கியுள்ளது.

இரு தரப்புக்குமிடையே தற்காலிக போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் போர் நிறுத்தத்துக்கான அறிகுறி தென்படவில்லை.

உணவுப் பஞ்சம் அதிகரித்துள்ள நிலையில் ரமலான் நோன்புக்கான கொண்டாட்டங்கள் காஸா மக்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாதது.

இஸ்ரேல் தாக்குதலில் தகர்ந்த மசூதி கட்டடங்களுக்கு வெளியில் மக்கள் வழிபாடு மேற்கொள்கின்றனர். அலங்கார விளக்குகள் மற்றும் தோரணங்கள் தற்காலிக குடியிருப்புகளில் சூழ்ந்துள்ளன.

அக்டோபர் முதல் போர் சத்தத்தை மட்டும் கேட்டு வரும் காஸாவில் இந்த சிறிய கொண்டாட்டமே பெரிதாக உள்ளது.

முகாமாக மாற்றப்பட்டுள்ள ஐநாவின் பள்ளியில் சிறுவர்கள் நடனமாடுவதும் ஒருவர் மீது ஒருவர் நுரை வீசி விளையாடுவதுமான காணொலிகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் குழுமி இந்த நோன்பை மேற்கொள்ளும்போது அவர்களின் நினைவுக்கு முதலில் வருவது பாலஸ்தீனர்களின் துயர்தான். எனக்கும் அது தான் முதலில் நினைவுக்கு வருகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகள் வான்வழியாக மீட்பு பொருள்களை வீசி வருகின்றன. கடல் வழியாகவும் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, “யாருடைய கண்களிலும் மகிழ்ச்சி இல்லை. அனைத்து குடும்பங்களும் சோகத்தில் உள்ளன. ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது” என பாலஸ்தீனர் ஒருவர் அசோசியேடட் பிரஸிடம் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This