பங்களாதேஷில் மீண்டும் தலைதூக்கிய வன்முறை; 91 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் மீண்டும் தலைதூக்கிய வன்முறை; 91 பேர் உயிரிழப்பு

1971ஆம் ஆண்டு இடம்பெற்ற பங்களாதேஷ் விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அரசு வேலையில் தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என அந்நட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் வன்முறையாக மாறியதனால், அரசு இதனை தடுக்கும் முயற்சியில் ஈடுட்டபோது 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்த நிதி ஒதுக்கீட்டு சட்டத்தை தற்காலிகமாக அந்நாட்டு உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ஹேக் ஹசீனா தலைமையிலான அசு பதவி விலக வேண்டும் என மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இதில் போராட்டக்காரர்களுக்கும் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் போராட்டம் வெடித்தது. பொலிஸாரும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.

இந்த வன்முறையில் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This