புதிய இந்திய தேர்தல் ஆணையர் குறித்து மார்ச் 15ல் ஆலோசனை!

புதிய இந்திய தேர்தல் ஆணையர் குறித்து மார்ச் 15ல் ஆலோசனை!

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.

2027ம் ஆண்டு வரை பதவிக்காலம் இருந்தது. மேலும், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அருண் கோயல் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜக அரசை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அருண் கோயல் ராஜினாமாவை தொடர்ந்து தேர்தல் ஆணைய அமர்வில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜீவ் குமார் மட்டுமே இருப்பதால், இந்த விவகாரம் பிரச்சினையை எழுப்பி உள்ளது.

இந்நிலையில், புதிய இந்திய தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This