பெஷாவரில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி!

பெஷாவரில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி!

பாகிஸ்தானில் இன்று காலை, போர்ட் பஜார் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.

இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் பலத்த காயமடைந்தார்.

காயமடைந்தவர் அங்குள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் (Lady Reading Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வெடித்த குண்டுகள், 4லிருந்து 5 கிலோகிராம் வரை எடை கொண்டவை என்றும் நடைபெற்றது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.

தற்போது வரை குண்டு வெடிப்பிற்கு எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.

அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையின் முக்கிய பிரிவு அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This