மருத்துவமனைக்குள் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மருத்துவர்!
பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் மருத்துவமனை வளாகத்திற்குள் நிர்வாணமாக சுற்றித் திரிந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு பணியாற்றி வரும் 41 வயது மருத்துவர் ஒருவர் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அடிக்கடி மருத்துவமனை வளாகத்திற்குள் அதிபோதையில் அவர் சுற்றித் திரிவது வாடிக்கையான ஒன்று என, சக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அடிக்கடி புகார் அளித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ஒரு வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அந்த மருத்துவர் தனது ஆடைகளை கலைந்து விட்டு மருத்துவமனை வளாகத்திற்குள் நிர்வாணமாக சுற்றித் திரிவது பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக பலமுறை தகவல் அளித்தும் மேல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்த சம்பவம் வீடியோவாக தற்போது வெளியாகியிருப்பதாக அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே மருத்துவத் துறையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இதுபோன்ற போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு அடிமையாகி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மகாராஷ்டிராவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மருத்துவர் யார் என்பது தொடர்பாக மருத்துவத்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.