சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை!

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் புதிய நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி நிரல் கடந்த 7ம் திகதி வெளியிடப்பட்டது.

சாதாரணமாக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து 5 நாட்களுக்குப் பிறகு விவாதம் நடத்தப்படும். இந்த பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This