காலி முகத்திடலில் IORA நிகழ்வு!
எதிர்கால சந்ததியினருக்கான நிலையான இந்து சமுத்திரத்தை உறுதி செய்தல்” எனும் தொனிப்பொருளில் இன்று (10) கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறும் 2024 ஆம் ஆண்டுக்கான “IORA” தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கலந்து கொண்டார்.
மேலும் அங்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி,உறுப்பு நாடுகளின் தூதரகங்கள் மற்றும் நாட்டின் அரச நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சிகளையும் பார்வையிட்டார்.
CATEGORIES நிகழ்வுகள்