குழுவினரால் இழுத்துச் சென்ற மாணவி சடலமாக மீட்பு!

குழுவினரால் இழுத்துச் சென்ற மாணவி சடலமாக மீட்பு!

தேயிலை தோட்டத்தில் 17 வயதுடைய மாணவியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட தலாவ வீதி நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டமொன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கரந்தெனிய, மந்தகந்த, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா நடிஷானி என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கரந்தெனிய தல்கஹாவத்தை, கங்கபாறை பிரதேசத்தில் வைத்து நேற்று (08) முச்சக்கர வண்டியில் வந்த குழுவொன்றினால் பலவந்தமாக இவர் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் எல்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This