நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதி!
நடிகர் அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகின்றார்.
மகிழ்திருமேனி இயக்கும் இப்படத்தில் திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து முடிந்த நிலையில், அடுத்து ஜோர்ஜியாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை வீடு திரும்புவார் என்றும் அஜித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized