மருத்துவமனையில் கேட்பாரற்ற 4,000 உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்த இளம்பெண்!

மருத்துவமனையில் கேட்பாரற்ற 4,000 உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்த இளம்பெண்!

டெல்லி ஷாத்ரா பகுதியை சேர்ந்தவர் பூஜா சர்மா (26). இவர் மருத்துவமனைகளில் நீண்ட காலமாககேட்பாரற்று இருக்கும் உடல்களை பெற்று அவற்றுக்கு கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகள் செய்து வருகிறார்.

இதுகுறித்து பூஜா சர்மா கூறும்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 4000 உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்துள்ளேன். இவர்கள் ஆதரவற்றவர்கள் அல்லது குடும்பத்துடன் தொடர்பு இல்லாதவர்கள். கடந்த 2022 மார்ச்13ஆம் திகதி ஒரு துயர கொலைசம்பவத்தில் எனது அண்ணனை இழந்தேன். அப்போதிலிருந்து, நான் எனது தனிப்பட்ட துயரத்தைமற்றவர்களுக்கு ஆறுதலளிக்கும் ஆதாரமாக மாற்றிக் கொண்டேன். ஒரு சிறிய சண்டையில் 30 வயதான எனது அண்ணன் எனது கண் முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதைக்கேட்டு எனது தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது” என்றார்.

தனது அண்ணனுக்கு இறுதி சடங்குகள் செய்த அடுத்த 2 நாட்களில் பிறருக்கு உதவ வேண்டும் என்ற உறுதிப்பாட்டை எடுத்தார் பூஜா. தனது குடும்ப பொறுப்புகளை கவனிப்பதுடன் ஆதரவற்றவர்களுக்கு உதவி வருகிறார். மேலும் காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனை அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு ஆதரவற்றவர்களின் உடல்களுக்கு கண்ணியமான இறுதிச் சடங்கு செய்து வருகிறார்.

“நான் எனது தந்தை மற்றும் பாட்டியுடன் வசிக்கிறேன். எனதுதந்தை டெல்லி மெட்ரோவில் ஒப்பந்த ஓட்டுநராக பணியாற்றுகிறார். இறுதிச் சடங்குக்கு ஓர் உடலுக்கு ரூ.1,000 முதல் 1,200 வரைசெலவாகிறது. எனது பாட்டிக்கு வரும் பென்ஷன் தொகையில் இருந்து இந்த செலவை சமாளிக்கிறேன்” என்கிறார் பூஜா.

இந்தப் பணியால் பல சவால்களையும் பூஜா எதிர்கொண்டு வருகிறார். அவருக்கான திருமண வாய்ப்பு தள்ளிப் போகிறது.

“பலர் நான் செய்யும் இந்த வேலையை ஒரு தடையாக பார்க்கிறார்கள். என் நண்பர்கள் என்னைசந்திப்பதை அவர்களின் குடும்பத்தினர் தடுக்கின்றனர் என்கிறார்.

பூஜா, சமூகப் பணியில் இளங் கலை பட்டமும் பிறகு முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This